வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு,தூத்துக்குடி மாவட்டம்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு
நடைபெறும் மையமான விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் - குமாரகிரி CKT மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி தேர்தல் நடத்தும் அலுவலரும்
மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதி நேரில் சென்று வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு
செய்தார்.பின்னர் வாக்குச்சாவடி மையத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை,
வாக்குச்சாவடி
அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி
அலுவலர்களுக்கு தபால் வாக்கு வழங்குவதற்கும், வழங்கப்பட்டுள்ள தபால் வாக்குகளை மீண்டும்
செலுத்துவதற்கும் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதி மையத்தினையும் ஆய்வு
செய்தார்.இந்நிகழ்வின்போது விளாத்திகுளம் தேர்தல் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன்
மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்ட தேர்தல் நடத்தும்
அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பினை ஆட்சியர் ஆய்வு செய்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
MLA மார்க்கண்டேயன் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு!
அடுத்த
காவல்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் 5-ஆம் நாள் திருவிழா!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026