விளாத்திகுளம் அருகே புதுப்பிக்கப்பட்டும் 6 மாதங்களாக பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஆறாவது வார்டு நடுத்தெருவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட வாட்டர் டேங்க் மற்றும் மின் மோட்டார் ஆகியவை செயல்படுத்தாமல் இருப்பதால், 6வது வார்டு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே புதுப்பிக்கப்பட்ட நீர்த்தகத் தொட்டியை மக்களின் பயன்பாட்டில் கொண்டு வர எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் ஏராளமானோர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.இதில் இலக்கிய அணி செயலாளர் வேலுச்சாமி, அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் சின்னத்துரை, கார்ட்டன் பிரபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Vilathikulam
6 மாதங்களாக பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை!
அடுத்த
பல மணி நேரம் காத்துக்கிடக்கும் நோயாளிகள்: அமைச்சர் மா.சு. ஆய்வுக்கு பின்னும் இதே நிலைதானா?
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026