தூத்துக்குடி
மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு
புகுந்து பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 6000 குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் என தமிழக
முதல்வர் மு. க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்நிலையில் இதற்கான பணம் ஒதுக்கீடு
செய்யப்பட்டு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை ரேஷன் கடையில் டோக்கன் வாங்கிய
பொதுமக்கள் பணம் வாங்க சென்றுள்ளனர், அப்போது அங்கே ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர், ஆயிரம் ரூபாய் வாங்க மறுத்து ரூபாய் 6000
தங்களுக்கு வழங்க
வேண்டும் என்று 29-12- 2023 வெள்ளிக்கிழமை
காலை முதல் இரவு வரை ECR சாலையில்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல் ஆய்வாளர் அனிதா பேச்சுவார்த்தை
நடத்தி தங்களின் கோரிக்கை அரசுக்கு கொண்டு
செல்லப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
கலைந்து சென்றனர்.
Vilathikulam
வெள்ள நிவாரணத் தொகை 6000 வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விஜயகாந்தின் திருஉருவப்படத்திற்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை.!
அடுத்த
மழை வெள்ள நிவாரணத் தொகை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026