விளாத்திகுளத்தில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் கணேசன் (40) கணேசன் தனது இருசக்கரவாகனத்தில் மேல்மாந்தையில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஆற்றங்கரை திரும்பி வந்து கொண்டிருந்த போது, விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் ஆண்டியப்பன் (51) பேரிலேவன்பட்டியில் இருந்து வேம்பார் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனமும் விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது , இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், ஆண்டியப்பன் பலத்த காயம் அடைந்து தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணேசனின் உடலை மீட்ட விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி,ஒருவர் படுகாயம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விவசாயிகளை கண்டுகொள்ளாத கனிமொழி எம்பி - விவசாயிகள் வேதனை...
அடுத்த
எவ்வளவு நேரமானாலும் எல்லாரோட மனுவையும் வாங்கிகிட்டு தான் போவேன்-சொன்னபடியே செய்த கனிமொழி எம்.பி.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026