தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட அமைப்புகள்
மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இன்று மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று நாம் தமிழர் கட்சியினர் சார்பில்
தமிழ்நாட்டின் ஏராளமான பகுதிகளில் மே-18 நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒரு
பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர்
கட்சியின் சார்பில் மே - 18 நினைவு தினத்தை
அனுசரிக்கும் பொருட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான
முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என
ஏராளமானோர் பங்கேற்று இரத்த தானம் செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள்,
அரசு மருத்துவமனை
மருத்துவர்கள், செவிலியர்கள்,
சுகாதார பணியாளர்கள்
மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
விளாத்திகுளத்தில் நாம் தமிழர் கட்சியினர் இரத்ததான முகாம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மரக்கன்றுகள் நடும்பணியின் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
அசைவ விருந்து வழங்கி அசத்திய இஸ்லாமியர்கள் - ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026