தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், JSW தனியார் நிறுவனம் மற்றும் இந்தியா விஷன் இன்ஸ்டியூட் தொண்டு நிறுவனம் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர். இதில் இப்பள்ளியில் பயிலும் 6-வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
மேலும் விளாத்திகுளம் மற்றும் எட்டையபுரம் பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கண் பரிசோதனை நடத்தி அதில் 3000 மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை செய்ததில், 100 மாணவ-மாணவிகளுக்கு குறைபாடு கண்டறியப்பட்டு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
அதிலும் 200 மாணவ மாணவிகளை விரிவான கண் பரிசோதனை செய்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Vilathikulam
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குடிநீர் தட்டுப்பாடு : செயல் அலுவலரிடம் பொதுமக்கள் ஆவேசம்!
அடுத்த
அடிபம்பின் பரிதாப நிலை - அவதியுறும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026