எட்டையபுரத்தில் "NAMASTE" தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட முகாம்..!



தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான "NAMASTE நலத்திட்ட முகாம்" இன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. எட்டையபுரம் பேரூராட்சி மன்ற வளாகத்தில் நடந்த சிறப்பு முகாமினை எட்டையபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட கழிவு சேகரிப்பாளர்கள் NAMASTE திட்டத்தில் இணைக்கப்பட்டனர்.


மேலும் அவர்களுக்கு சுயதொழில் மற்றும் உபகரணங்களுக்கான கடன் குறித்த விளக்கம் வழங்கப்பட்டது. குறிப்பாக 

தூய்மை பணியாளர்களுக்கு NAMASTE அடையாள அட்டை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த சிறப்பு நலத்திட்ட முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதில் எட்டையபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், வி.புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் கதிர்வேல், வார்டு கவுன்சிலர்கள் ராமர், மாதவன், மணிகண்டன், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.