எட்டயபுரத்தில் லாரி மோதி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம்-நடுவர்பட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் சங்கர் (48) சங்கர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் எட்டையாபுரம் சிங்கப்பூர் காம்ப்ளக்ஸ் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானதில், சங்கர் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் சங்கரை 108 வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே பரிதாபமாக சங்கர் உயிரிழந்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் குறுக்குச்சாலை கக்ரம்பட்டி பகுதியை சேர்ந்த தேவபிச்சை என்பவரின் மகன் மாரிமுத்து (34) என்பவரை பிடித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
லாரி மோதி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தருவைகுளம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்களை மாலத்தீவு கடலோர காவல் படை கைது.
அடுத்த
பாலஸ்தீன இஸ்ரேல் நாடுகள் இடையே நடைபெற்றுவரும் போரை நிறுத்த கோரி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026