எட்டயபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம் : 300-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 260 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லவிருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் வீடியோ கேமிரா கண்காணிப்பு மூலம் "STRONG ROOM"-ல் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக எடுத்துவரப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இதில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கட்சி சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சிகிச்சை வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், கட்சியின் பெயர், கட்சியின் சின்னம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் விளாத்திகுளம் தொகுதியில் உள்ள 260 வாக்குச்சாவடி மையங்களுக்கு 312 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என கூடுதலாக 56 வாக்கு பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் சமயத்தின் போது வாக்குப்பதிவே இயந்திரங்களில் ஏதேனும் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்துவதற்கு எதுவாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு 20% கூடுதலான வாக்கு பதில் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.