தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ள நீரில் முற்றிலுமாக மூழ்கி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவ்வாறு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் அவர்களை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான பால், உணவு பொருட்கள், பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிதம்பர நகர், ராஜூவ் நகர், சுப்பிரமணியபுரம், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு விளாத்திகுளம் அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டன.
Vilathikulam
இந்து சமய அறநிலை துறை சார்பில் நிவாரண உதவி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
150 நபர்களுக்கு திமுக நெசவாளர் அணி சார்பில் நிவாரண உதவி.
அடுத்த
400 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கனிமொழி எம்.பி.!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026