விளாத்திகுளத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் மாற்றுத்திறனாளிக்கு எலக்ட்ரிக் தானியங்கி வாகனம்வழங்கப்பட்டது!
தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம்
"என் மண்,என் மக்கள்" யாத்திரை நிகழ்ச்சியின் போது
மாற்றுத்திறனாளி சகோதரர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த முருகேசன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு அண்ணாமலை
அவரிடம் தனக்கு எலக்ட்ரிக் தானியங்கி வாகனம் ஏற்பாடு செய்த தருமாறு கோரிக்கை மனு
கொடுத்திருந்தார். அவர் கோரிக்கை ஏற்கப்பட்டு ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள
எலக்ட்ரிக் தானியங்கி வாகனம் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு இன்று
விளாத்திகுளம் பாரதி பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்
வெங்கடேசன் சென்ன கேசவன்அவர்களால் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட
பொதுச்செயலாளர் சரவணகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் கணேஷ் மாநில செயற்குழு
உறுப்பினர் ராமமூர்த்தி ஒன்றிய தலைவர்கள்
கனகவேல்ராஜ், பார்த்திபன் ,அரசு தொடர்பு
பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி, பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் முருகன், விருதுநகர் மாவட்ட பிரச்சாரபிரிவு தலைவர் காமாட்சி , மற்றும் காளியப்பன், செந்தில் குமார் சக்தி குமார், வெங்கடேஷ், மாரிமுத்து, கண்ணன், சுயம்பு, பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
பாஜக அண்ணாமலை சார்பில் மாற்றுத்திறனாளிக்கு எலக்ட்ரிக் தானியங்கி வாகனம்வழங்கப்பட்டது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!
அடுத்த
தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட ஈராச்சி கிராம ஆதிதிராவிட மக்கள்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026