தமிழகத்தின்
புகழ்பெற்ற ஆட்டுச் சந்தையில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே
உள்ள எட்டயபுரம் மாட்டுச்சந்தை இங்கு வாரம் ஒரு முறை சனிக்கிழமை நடைபெறும்,
இந்த ஆட்டுச் சந்தைக்கு
ராமநாதபுரம், சிவகங்கை,
மதுரை, தேனி,திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான
ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.அதிலும் குறிப்பாக தீபாவளி,பொங்கல்,கிறிஸ்துமஸ்,ரம்ஜான்,பக்ரீத் உள்ளிட்ட
பண்டிகை காலங்களில் பல கோடி ரூபாய் கணக்கில் வியாபாரம் நடைபெறுவது வழக்கம்.
வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான்
பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
கடந்தாண்டு
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 3 கோடி ரூபாய் வரை
நடைபெற்ற ஆட்டுச் சந்தை,தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால்,
தேர்தல் ஆணையத்தின்
நடவடிக்கையால்,ரூபாய் 5000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் உரிய ஆவணம்
இருக்க வேண்டும் என்று தேர்தல் நிபந்தனை இருப்பதால், ஆடுகளை வாங்குவதற்கு எந்த ஆவணமும் கொண்டு செல்ல
வேண்டும் என்பது வியாபாரிகளுக்கும் ஆடு வாங்குவோர்களுக்கும் தெரியவில்லை, இதனால் இந்த ஆண்டு ரம்ஜான் ஆடு விற்பனை மிகவும்
குறைந்தே காணப்பட்டது.இதனால் ஆடுகளை வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கொண்டு
வர ஆர்வம் காட்டாததால், ஆடுகள் வரத்து
குறைந்து எட்டையாபுரம் ஆட்டுச்சந்தை களையிழந்து காணப்பட்டது,குறைவான ஆடுகள்
வந்ததால், ஆடுகளை வாங்கி செல்ல வந்த வியாபாரிகள் பெரும்
ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.