தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சென்னமரெட்டியபட்டி சோதனைச்சாவடியில், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடுதல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரையில் உள்ள அரசு யாழினி கதர் & பட்டு பவன் நிறுவனத்திலிருந்து சேலைகளை விற்பனை செய்வதற்காக அந்நிறுவனத்தின் ஊழியரான மதுரையைச் சேர்ந்த அடைக்கலராஜ் என்பவரின் மகன் ரோவினஸ் ஆரோக்கியசாமி (43) மதுரையில் இருந்து TN58 BH3997 என்ற வாகன பதிவெண் கொண்ட MARUTI SUZUKI EECO வாகனத்தில் விளாத்திகுளம் நோக்கி வந்துள்ளார். அப்போது சென்னமரெட்டியபட்டி சோதனைச் சாவடியில் கூடுதல் நிலையான கண்காணிப்பு குழுவினர் (தேர்தல்) ரோவினஸ் ஆரோக்கியசாமியின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் விற்பனைக்காக கொண்டு செல்லும் ரூ.15 லட்சத்து 69 ஆயிரத்து நூறு மதிப்புள்ள 185 சேலைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 185 சேலைகளை நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரிகள் பறிமுதல் செய்து விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் துணை வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில்ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் உத்தரவின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் விளாத்திகுளம் அரசு சார்நிலை கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது...
Vilathikulam
ரூ.15 லட்சம் மதிப்புள்ள 185 சேலைகள் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாகன விபத்தில் ஒருவர் பலி.
அடுத்த
திமுக பாக முகவர்களுடன் ஆலோசனை நடத்திய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026