தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் ராமர் (58) 29-01-2024 மாலை 4 மணியளவில் ராமர் கவுண்டம்பட்டி கண்மாயில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். இதனை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர்கள் விளாத்திகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்புதுறை நிலைய வீரர்கள் கண்மாய் நீரில் மூழ்கிய ராமரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 8 மணி ஆகியும் ராமர் கிடைக்காததால், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால், தீயணைப்புத் துறையினர் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் 30-01-2024 செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல்மீண்டும் ராமரை கவுண்டன்பட்டி கண்மாயில் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். இதனை அடுத்து நீண்ட தேடுதலுக்குப் பின்பு காலை 11 மணியளவில் ராமரின் உடலை கண்மாய்யிலிருந்து தீயணைப்புத் துறை வீரர்கள் மீட்டனர். இதனை அடுத்து உடலை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
கண்மாய் நீரில் மூழ்கி முதியவர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 679 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
அடுத்த
சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்து வாழ்த்து !
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026