விளாத்திகுளம்
அருகே தொடர் மழையின் காரணமாக 200 பரப்பளவில்
பயிரிடப்பட்டிருந்த சோளம், உளுந்து, மிளகாய், வெங்காயம்
உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு! தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் இந்தாண்டு
மிளகாய், சோளம், மக்காச்சோளம்,கம்பு, உளுந்து,பாசிப்பயிறு,
வெங்காயம் உள்ளிட்ட
பயிர்களை இந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி
செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது தமிழக முழுவதும் பெய்து வரும் தொடர் மழை
பெய்து வருகிறது,
இதன் ஒரு
பகுதியாக விளாத்திகுளம் அருகே உள்ள குமாரசக்கனாபுரம் கிராமத்தில் சுமார் 200
ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த, சோளம்,மிளகாய், உளுந்து,பாசிப்பயிர் உள்ளிட்ட விவசாய பயிர்கள் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து ஓடைகளில்
உடைப்பு ஏற்பட்டு விலை நிலங்களுக்குள் கடந்த இரண்டு நாட்களாக மழை நீர் தேங்கி இருப்பதால்,
விவசாயப் பயிர்கள் நீரில்
அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது, இதுகுறித்து
வருவாய் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் அளித்தும், இதுவரை எந்த
அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஐந்து நாட்களுக்கு
முன்புதான் குருத்து பூச்சி மற்றும் படைப்புழுகளுக்கு மருந்து தெளித்த நிலையில் மழையின்
காரணமாக பெரிதும் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்,
எனவே அரசு முறையாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு
வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல்
விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுப்பையாபுரம் கிராமத்தில் நீர் வரத்து ஓடைகளில்
உடைப்பு ஏற்பட்டு, சுமார் பரப்பளவில் விவசாய பயிர்கள் நீரில்
மூழ்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Vilathikulam
மழை நீரில் மூழ்கிய 200 ஏக்கர் விவசாய பயிர்கள்! அரசு உதவிக்கரம் நீட்டமா?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய வகுப்பறை கட்டிடங்களை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!
அடுத்த
உடல் உறுப்பு தானம் செய்த மாமனித விவசாயி !
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026