தூத்துக்குடி
அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆதரித்து விளாத்திகுளம் அருகே உள்ள
காடல்குடி, மாதலாபுரம்,
சென்னம்பட்டி,புதூர்,சின்னமநாயக்கன்பட்டி,
உள்ளிட்ட பகுதிகளில்
இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கடம்பூர் ராஜு பேசுகையில்.
*திமுகவினர் உங்களிடம் தேர்தலில் பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றி விட்டனர்.
* மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் தகுதியுள்ள பெண்கள் தகுதி இல்லாத பெண்கள் என்று உங்களை ஏமாற்றி, அசிங்கப்படுத்தி விட்டனர், ஒரு தாய்மார்களை பிரிப்பதற்கு இவர்கள் யார்?இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது.
* இன்று தமிழகத்தில் உள்ள திமுக அமைச்சர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுது, பொதுமக்கள் எங்களுக்கு 1000 ரூபாய் வரவில்லை, நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுப்பீர்கள் என்று தானே ஓட்டு கேட்டீர்கள், எங்கே 1000 ரூபாய் என்று? அமைச்சர்களை பொதுமக்கள் விரட்டி அடித்து வருகின்றனர். திமுகவினருக்கு சொந்தக்காசில் சூனியம் வைத்தது போல் இந்தத் திட்டமே உங்களை சோலிய முடித்து விடும், இந்தத் தேர்தல் திமுகவை விட்டுக் அனுப்பக்கூடிய தேர்தலாக அமையும்.
* அதிமுக வேட்பாளர்
சிவசாமி வேலுமணி நல்லவர், பரம்பரை பண்டாரவிளை
வைத்தியர் குடும்பத்தைச் சார்ந்தவர், தொழில் பார்த்து சம்பாதிக்க கூடியவர், ஆனால் "திமுகவினர் எந்த தொழிலும் இல்லாமல் சம்பாதிக்க கூடியவர்கள்,
அந்த டெக்னிக்கெல்லாம்
நமக்கு தெரியாது.
"அது திமுகவினருக்கு தான் கைவந்த கலை, இந்தியாவிலேயே ஊழலால் கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது திமுக மட்டும் தான்.
* அதிமுக ஆட்சியில் 10 வருடங்களாக மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பசுமை வீடு திட்டம், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் கொடுத்து வந்தோம்.
* இன்று விலைவாசி பால் விலை உயர்வு, வீட்டு வரி தொழில் வரி உயர்வு, 50000 ரூபாய் இருந்த பத்திரப்பதிவு, தற்போது 3 லட்சம் வரை பத்திரப்பதிவு கட்டணம் உயர்ந்துள்ளது, சாதாரண பட்ட ஏழை, பாலை மக்கள் இன்று நிலங்கள் வாங்கவும் விற்கவும் முடியாத நிலை உள்ளது.
* கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 4110 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தைத்திருநாளுக்கு 2500 ரூபாய் வழங்கப்பட்டது, அப்போது இருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தைத்திருநாளுக்கு குடும்ப அட்டைக்கு 5000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் தற்போது அதிமுகவினர் பல்வேறு கட்டப் போராட்டங்கள் வைத்த பின்பு தான் பொங்கல் பரிசு மற்றும் மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்க தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
* இன்றைக்கு இந்த ஆட்சியின் அவல நிலை போதை விற்பனை செய்பவர்களை பிடிக்க வேண்டும், ஆனால் போதை விற்பனை செய்பவர்கள் இன்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அருகாமையில் இருந்தவாறு போட்டோ எடுத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் காவல்துறையினர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள், இதனால்தான் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது, போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகம் தள்ளாடி வருகிறது, இனிமேல் இந்த ஆட்சியை விட்டு வைத்தால் தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது.
* ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறாரு சொல்லி பாட்டு போட்டு இன்றைக்கு விடியலே பொது மக்களுக்கு வரவில்லை, விடியல் ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டும்தான் விடிந்துள்ளது, எனவே எடப்பாடியார் டிவியில் கூறுவது போல் ஒற்றை விரலால் ஓங்கி அடித்து இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று கடம்பூர் ராஜு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.