தமிழகத்தில்வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதி மக்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க காவல் துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்குவோம் என்று பொதுமக்களிடம் நம்பிக்கையூட்டும் வகையில்விளாத்திகுளம் அருகே உள்ள கடால்குடி கிராமத்தில் டி.எஸ்.பி இராமகிருஷ்ணன் தலைமையில்காவல் ஆய்வாளர் வெங்கடேஷ்உதவி ஆய்வாளர்கள்சிறப்பு உதவி ஆய்வாளர்கள்காவலர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை இராணுவப் படையினர் என 80க்கும் மேற்பட்டோர் இசைக்கருவிகள் முழங்கயவாறு அணிவகுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும்நம்பிக்கையூட்டும் விதமாகவும் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது..கடால்குடி காவல் நிலையத்தில் தொடங்கிய பேரணி, ஊர் முழுவதும் சுற்றி வந்து மீண்டும் காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.