விளாத்திகுளம் அருகே ரூ.5 எக்ஸ்ட்ரா தராததால் மது பிரியரை காலால் எட்டி உதைத்த மதுபான விற்பனையாளரின் CCTV காட்சி!


எப்போதும் விற்பனையாளர் சீனிவாசனை எதிர்த்து கேள்வி கேட்டால் காவல்துறையினரை வைத்து மிரட்டுவதாக மது பிரியர்கள் குற்றச்சாட்டு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பரளச்சி சாலையில் கடைய எண் 10143 விலாசத்தில் அரசு டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.


இந்தகடையில் சீனிவாசன்(45) என்பவர் விற்பனையாளராக பணி செய்து வருகிறார்,இவர் பாட்டிலுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை வழக்கமாக வசூல் செய்வதாகவும், மதுபாட்டிலில் உள்ள ஸ்டிக்கரை இவர் கிழித்துதான் மது பாட்டில்களை தருவதாகவும், மதுபாட்டில் வாங்க வருபவர்களிடம் அநாகரீகமாக பேசுவதாகவும் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருவதாக மது பிரியர்கள் கூறி வருகின்றனர்.



இந்தநிலையில் நேற்று மது வாங்க வந்த ஒரு மது பிரியரிடம் விற்பனையாளர் சீனிவாசன் கூடுதலாக பாட்டிலுக்கு 5 கேட்டதாகவும், அந்த மது பிரியர் 5 ரூபாய் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, விற்பனையாளர் சீனிவாசன் அந்த மது பிரியரை மதுக்கடையில் இருந்து சாலை வரை அடித்து எத்தி  மிதித்து வந்த CCTV காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மது பிரியர்கள் கூறுகையில், விற்பனையாளர் சீனிவாசன் தரக்குறைவாக பேசுவதும், கூடுதலாக பணம் வசூல் செய்வதையும், பாட்டில் ஸ்டிக்கரை கிழித்து கொடுப்பதையும் வழக்கமாக வைத்து வருவதாகவும், இதுகுறித்து நாங்கள் எதிர்த்து கேள்வி கேட்டால்  எங்களை காவல்துறையினரை வைத்து மிரட்டுவதாகவும் மது பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.