விளாத்திகுளத்தில் கனரா வங்கியின் 52வது புதிய கிளை திறப்பு விழா! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை சாலையில் கனரா வங்கி 52 வது கிளையை மதுரை பொது மேலாளர் கிருஷ்ணமோகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தூத்துக்குடி உதவி பொது மேலாளர் ஜக்கல சுரேந்திர பாபு, விளாத்திகுளம் கனரா வங்கி மேலாளர் மாரிச்செல்வி, மண்டல மேலாளர் கௌசல்யாதேவி , நாகேஷ், துணை மேலாளர் சரண்யா, எழுத்தர் ஜீவா, நகை மதிப்பீட்டாளர் சிவகுமார், சிறப்பு விருந்தினர்களாக பேரூராட்சி தலைவர் சூர்யா அயன் ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, அன்பில் நாராயணமூர்த்தி, ஒப்பந்ததாரர் பாண்டியராஜன், தொழிலதிபர் கந்தவேல் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விளாத்திகுளத்தில் ஸ்டேட் பாங்க், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, கரூர் வைசியா, தமிழ்நாடு பாண்டியன் கிராம பேங்க், ஹெச்டிஎஃப்சி, இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் இருக்கும் நிலையில் தற்போது கனரா வங்கியின் புதிய கிளையும் பிளாத்தி வரும் பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பெருமளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vilathikulam
கனரா வங்கியின் 52வது புதிய கிளை திறப்பு விழா!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் பேரூராட்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அடுத்த
சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா போட்டி!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026