தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவம் மற்றும் இயற்கை
மருத்துவ பிரிவு சார்பில், செவிலியர்
பயிற்சிப்பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாணவிகளுக்கு இயற்கை உணவுகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் மற்றும்
நன்மைகள் பற்றியும், பருவ காலங்களில்
வரக்கூடிய நோய்கள் பற்றியும், வளர் -
இளம்பெண்களுக்கான உணவு முறைகள் பற்றியும் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர்
டாக்டர்.தமிழ் அமுதன் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர்.ஜனார்சன் ஆகியோர்
எடுத்துரைத்தனர்.
மேலும் இந்த
சிறப்பு முகாமை விளாத்திகுளம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் சுரேஷ்குமார்
தொடங்கி வைத்து மாணவிகளிடம் சிறப்புரை ஆற்றினார்.இதைத்தொடர்ந்து
இறுதியில் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் வெட்டிவேர், புதினா, நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் உள்ளிட்டவற்றை
கலந்த ஆரோக்கியமான மூலிகை தேநீர் வழங்கப்பட்டது.
Vilathikulam
விளாத்திகுளத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாயல்குடி அருகே புனித பரலோக அன்னையின் தேர்பவனி திருவிழா!
அடுத்த
255 பேர் சத்துணவு ஊழியர் சங்கம் ரத்த கையெழுத்து?
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026