தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.1000 மற்றும் அதிகளவில் பாதிப்படைந்த பகுதிகளுக்கு ரூ.6000 என நிவாரணத்தொகையாக அறிவித்திருந்தார். இந்தநிலையில், இன்று முதல் இந்த 4 மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாய விலைக் கடைகளின் மூலமாக நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று விளாத்திகுளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நியாய விலைக் கடையில் வைத்து நிவாரணத் தொகையை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி நிவாரணத்தொகை வழங்கும் பணிகளைத் தொடக்கி வைத்தார். அதேபோன்று, மழையால் வீடுகளை முற்றிலுமாக இழந்த 22 பேரில் முதற்கட்டமாக 20 குடும்பத்தினருக்கு விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வைத்து விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன், ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கியதோடு வீடுகள் கட்டுவதற்கு உதவி செய்வதாக தெரிவித்தார். மேலும், தொடர் கனமழையால் சேதமடைந்த 245 வீடுகளுக்கும், உயிரிழந்த 367 ஆடுகள், 10 மாடுகள் மற்றும் 2020 கோழிகளுக்கு அவற்றின் உரிமையாளர்களிடம் மிக விரைவில் நிவாரணத்தொகை வழங்கப்படும் என விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Vilathikulam
மழை வெள்ள நிவாரணத்தொகை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விஜயகாந்த் மறைவையொட்டி மொட்டை அடித்து கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்!
அடுத்த
மானாவாரி பயிர்களுக்கான நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி புதூரில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026