தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோவில் குமரெட்டையாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பாலசுப்பிரமணியசாமி திருக்கோவிலில் மாசி மக உற்சவ விழா இன்று வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று காலை 9 மணியளவில் கோவிலில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இருந்து கொடி வஸ்திரம் மற்றும் கொடி பட்டு கிராமம் முழுவதும் உலாவாக கொண்டு செல்லப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம், இளநீர், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விஷேச தீபாராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும், இக்கோவிலின் மாசி மக உற்சவ விழாவின் 9-ம் நாள் திருவிழாவையொட்டி நடைபெறும் திருத்தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
Vilathikulam
பாலசுப்பிரமணியசாமி கோவில் மாசி மக உற்சவ விழா கொடியேற்றம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தார் சாலை சரியா போட்டு இருக்கா? அதிகாரிகள் ஆய்வு!
அடுத்த
காவல்துறை மற்றும் அரசு அலுவலர்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் பணிகள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026