விளாத்திகுளம் அருகே வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சென்னமரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த சிதம்பரரெட்டியார் என்பவரின் மனைவி லட்சுமிஅம்மாள் (70), இவரது கணவர் சிதம்பரரெட்டியார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், லட்சுமிஅம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அழகாபுரி - கோடங்கிபட்டி கிராமம் அருகே உள்ள இவரது விவசாய நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் வேப்பமுத்து எடுக்கசென்றபோது வெயிலின் தாக்கத்தினால் வயது முதிர்வின் காரணமாக லட்சுமிஅம்மாள் விவசாய நிலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாசார்பட்டி காவல் நிலையபோலீசார் லட்சுமிஅம்மாளின் உடலை மீட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.