விளாத்திகுளம் பேரூராட்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சியில் தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய ஆணை வழங்கிடுக, ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஓட்டுநர்களின் நிரந்தரம் செய்திடுக, 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அனைத்து கணினி பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்திடுக, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயமுருகன் தலைமை தாங்கினார் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தார் அரசு ஊழியர் சங்கம் வட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம் சிறப்புரையாற்றினார்.இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Vilathikulam
விளாத்திகுளம் பேரூராட்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்!
அடுத்த
கனரா வங்கியின் 52வது புதிய கிளை திறப்பு விழா!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026