விளாத்திகுளத்தில் சாலை வரி உயர்வை கண்டித்து டூரிஸ்ட் கார், வேன்உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அப்துல் கலாம் டூரிஸ்ட் கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் தமிழக அரசு அறிவித்த சுற்றுலா வாகனங்களின் சாலை வரியை அதிகப்படியாக உயர்த்தியதை ரத்து செய்,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அப்துல் கலாம் டூரிஸ்ட் கார், வேன் உரிமையாளர் நல சங்கத்தின் செயலாளர் செல்வ முருகன் தலைமையில் நடைபெற்றது, துணைத் தலைவர் முருகன்,பொருளாளர் அழகர் விக்னேஷ், துணைப் பொருளாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர், மணிகண்டன் வரவேற்பு உரையாற்றினார்,லத்திகா கண்ணன் சிறப்புரையாற்றினார், செய்யது யூசப் நன்றி உரையாற்றினார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், குளத்தூர், சூரங்குடி, பகுதி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
சாலை வரி உயர்வை கண்டித்து விளாத்திகுளத்தில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
லாரி டிரைவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை.
அடுத்த
ஆதனூர் பாலத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் நேரில் ஆய்வு செய்தார்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026