எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரம் பேருந்து நிலையம் முன்பு*மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால் கிராமப்புற குடும்பங்கள் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்,*ஒன்றிய அரசாங்கம் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை படிப்படியாக குறைத்து வருவதன் விளைவு திட்டத்தை முடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது,எனவே ஒன்றிய அரசாங்கம் உடனடியாக நிதியை ஒதுக்கி நிலுவை இல்லாமல் சம்பளத்தை உடனே வழங்க கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கு. ரவீந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டையபுரம் தாலுகா செயலாளர் ஜீவராஜ் மார்க்சிஸ்ட் கட்சி இளம்புவனம் கிளைச் செயலாளர் கருப்பசாமி ஆட்டோசங்க தலைவர் கண்ணன் தாலுகா குழு உறுப்பினர்கள் செல்வகுமார் முருகேசன் விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் ஆதீஸ்வரன் விதொச தாலுகா குழு வெள்ளைச்சாமி ராசம்மாள் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும் விவசாய தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
Vilathikulam
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026