விளாத்திகுளம் அருகே சேலை சக்கரத்தில் சிக்கியதால் பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ கல்லூரணி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மனைவி சித்தம்மாள் (70), இவர் விவசாய பணிக்காக ரெட்டியபட்டி கிராமத்திற்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பியபோது தனது உறவினறான சித்தையா என்பவரின் பைக்கில் பின்னார் அமர்ந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது சேலை, பைக்கின் பின் சக்கரத்தில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சித்தமாளை முதலுதவி சிகிச்சைக்காக நாகலாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சித்தம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Vilathikulam
பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பலி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தஞ்சாவூரில் இருந்து விற்பனைக்கு வந்துள்ள கொழு பொம்மைகள் - ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்!
அடுத்த
காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026