தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, உணவு இருப்பிடம் இன்றி வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சமூக ஆர்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் பணம் வழங்கி உதவி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் விஜய் பிரபாகரன் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தனது சேமிப்பு கணக்கில் இருந்து பத்தாயிரம் ரூபாயை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் வழங்கினார்.
Vilathikulam
வெள்ள நிவாரண உதவி வழங்கிய பள்ளி மாணவன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உதவிக்கரம் நீட்டிய ஓபிஎஸ் அணியினர்!
அடுத்த
நிவாரண பொருட்கள் வழங்கிய முன்னாள் MLA சின்னப்பன்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026