விளாத்திகுளம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது - 134 கிலோ புகையிலை பறிமுதல். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது மேலக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் மாரிராஜ்(40) என்பவர் மேலக்கரந்தை கிராமத்தில் நடத்தி வரும் பல சரக்கு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது, இதனை அடுத்து மாரி ராஜை கைது செய்த மாசார்பட்டி காவல் நிலைய போலீசார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 134 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 32 ஆயிரத்தை பறிமுதல் செய்து, மாரி ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Vilathikulam
134 கிலோ புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026