தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனரா வங்கியின் புதிய கிளை துவங்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு விரைவான சேவையை செய்து வருகின்றது. அதனடிப்படையில் கே.சி.சி.எஸ் கடன் உதவி வழங்கும் முகாம் நடைபெற்றது, கனரா வங்கியின் விளாத்திகுளம் கிளை, மேலாளர் மாரிச்செல்வி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார், விடியல் டிரஸ்ட் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்., நிறுவனத்தைச் சார்ந்த சுமார் 16 உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூபாய் 50 இலட்சம் கடனாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விடியல் டிரஸ்ட் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்., ன் நிர்வாக இயக்குநர் ஜோதிமணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார், முதன்மைச் செயல் அலுவலர் செந்தில்குமார், வரவேற்புரையாற்றினார். விழாவின் முடிவில் நகை மதிப்பீட்டாளர் மற்றும் நிர்வாக அலுவலர் பாலமுருகன், நன்றியுரை கூறினார். அலுவலகப் பணியாளர் சந்திரா, நிகழ்ச்சிகான முன்னேற்பாடுகளை செய்திருந்தார்.
Vilathikulam
விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விஷ வண்டு கூட்டினை தீயணைப்புத் துறையினர் அகற்றினர்!
அடுத்த
40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பேருந்து சேவை : கிராம மக்கள் மகிழ்ச்சி!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026