விளாத்திகுளம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.55 லட்சம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் சோதனைசாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது தூத்துக்குடியைச் சேர்ந்த சின்ன தும்பப் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன்(34) என்பவர் ஓட்டி வந்த TN69 K-7566 என்ற வாகனப் பதிவெண் கொண்ட EICHER வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 180 கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தி விதிகள் அமலில் இருக்கும் போது உரிய ஆவணங்கள் இன்றி பாலகிருஷ்ணன் கொண்டு சென்ற ரூ.2.55 லட்சம் பணத்தை முதுநிலை ஆய்வாளர் சுடலைமணி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து விளாத்திகுளம் அரசு சார் நிலை கருவூலத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.