தூத்துக்குடியில் கள்ள காதலுக்கு தடையாக இருந்த மகனை கள்ளக்காதலனை ஏவி விட்டு ஓட ஓட விரட்டி மகனை கொடூரமாக கொலை செய்த தாய்;  கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் கைது பரபரப்பு!

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன் இவரது மனைவி சுப்புலட்சுமி இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இந்நிலையில் சுப்புலட்சுமிக்கு தூத்துக்குடி டி எம் பி காலனி சேர்ந்த அவரது உறவினரான ஆவுடையப்பனுக்கு தம்பி முறை உள்ள உறவினரான  சுடலைமணி என்பவர் உடன் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அது கள்ள காதலாக மாறியுள்ளது. இதை ஆவுடையப்பன் கண்டித்துள்ளார் இதை அடுத்து சுப்புலட்சுமி குடும்பத்தினரை விட்டு பிரிந்து கள்ளக்காதலன் சுடலை மணியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.  இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஆவுடையப்பனின் மகனான கணேஷ் சுடலைமணியின் வீட்டிற்கு சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது தாயின் கள்ளக்காதலை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.  

இதைத் தொடர்ந்து நேற்று இரவு கள்ள காதலுக்கு தடையாக இருந்த மகன் கணேசை சுடலைமணி துணையுடன் தாய் சுப்புலட்சுமி கொலை செய்ய திட்டமிட்டு  டி.எம்.பி காலனிபகுதியில் பைக்கில் சென்ற கணேசை சுடலை மணி உள்ளிட்ட இரண்டு பேர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து ஆவுடையப்பன் உறவினர்கள்  பலியான கணேசனின் உடலை வாங்க மறுத்து கொலைக்கு காரணமான  தாய் சுப்புலட்சுமி கள்ளக்காதலன் சுடலை மணி உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.  

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தென்பாதம் காவல் நிலையத்தில் கடந்த 50 நாட்களுக்கு முன்பு சுடலைமணி மற்றொரு உறவினரான முருகன் என்பவர் மீது பொய் வழக்கு அளித்து முருகன் காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து கள்ள காதலுக்காக பல்வேறு கொலைகளை செய்து வரும்  சுடலைமணியை கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.