தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட மீனாட்சிபட்டி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து ஶ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட மீனாட்சிபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வைக்கப்பட்டிருந்த தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை நேற்று இரவு நான்கு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தினர். இந்த காட்சி அருகில் உள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி சேர்ந்த மக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி சாலையில் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஶ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்ட போலீசார் பொதுமக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர்.
இந்நிலையில், தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை சேதப்படுத்திய அருகில் உள்ள அணியாபரநல்லூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனாட்சிபட்டி ஊர் தலைவர் ராஜகோபால் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி
தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து ஶ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மீனவர்களுக்கு முறையாக மண்ணெண்ணெய் வழங்கப்படாததை கண்டித்து தரையில் படுத்து உருண்டு தங்கள் எதிர்ப்பு பதிவு செய்தனர்.
அடுத்த
மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிப்பு!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026