தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 441-ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜாதி சமயம் இன்றி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு: பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தங்கதேர் பவனி நடைபெறுகிறது.  தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்ற பேராலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக 10 நாட்கள் திருவிழா நடைபெறும் ,இந்த ஆண்டு  441-ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. காலையில் கொடியேற்றதிற்க்கு முன்பு கூட்டு திருப்பலி மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் அந்தோணி,  பனிமய மாதா பேராலய பங்குதந்தை குமாரராஜா ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது.இதைத்தொடர்ந்து பனிமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக அருள்தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றினர்.  அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், உள்ளிட்ட ஜாதி சமயமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இன்று கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் காலை மாலையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும் வரும்  ஆக்ஸ்ட் 5-ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தங்கதேர் பவனி வெகு சிறப்பாக நடைபெறும் .‌ கடந்த 2013ஆம் ஆண்டு தங்கத்தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது அதை தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தங்க தேர்த்திருவிழா நடைபெறுகிறது. மேலும் சுமார் 216 ஆண்டுகள் பழமையான தங்கத்தேர் இந்த ஆண்டு புதியதாக 53 அடி உயரத்திலும் ஜப்பான் நாட்டிலிருந்து வர அழைக்கப்பட்ட தங்க இலைகள் மற்றும் அமெரிக்கா நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அமெரிக்கா டைமண்ட்டால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் ,உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட வெளி நாடு என 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது.  திருவிழாவின் பாதுகாப்புக்காக தூத்துக்குடி நகர் பகுதிகளில் 1400 போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.