கோவில்பட்டியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் - விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி! தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 06.10.2023 முதல் 12.10.2023 வரை தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலூகா அலுவலகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கோவில்பட்டி கோட்டாட்சியர் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜோன் கிறிஷ்டி பாய் கலந்து கொண்டு கொடியசைத்து மினிமாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் கோவில்பட்டி தாசில்தார் லெனின், வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார், வருவாய் அலுவலர் ராஜசேகர், கிராம நிர்வாக அலுவலர் சந்திர சூடாமணி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முதல் திட்டங்குளம் வரை மினிமாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் திரளான இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்..
தூத்துக்குடி
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை பெய்ய வேண்டி எல்லையில் 101 ஆடுகள் பலி கொடுத்து படையல் -ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ விருந்து!
அடுத்த
சின்னூரில் சூரிய கூடார உலர்த்தி திறப்பு விழா!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026