விளாத்திகுளம் அருகே  கே.துரைச்சாமிபுரம் கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த அமுதமலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர் கீதா ஜீவன். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே. துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த  ராமமூர்த்தி என்பவரின் மனைவி அமுதமலர் (35) இவர் கடந்த 01-11-2023 அன்று விவசாய பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து இன்று உயிரிழந்த அமுத மலர் குடும்பத்தினரிடம் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர்,  முதலமைச்சரின் பேரிடர் மேலாண்மை நிதி ரூபாய் 4 லட்சம் அடங்கிய காசோலையை வழங்கி ஆறுதல் கூறினர். இந்நிகழ்வில் கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜோன் கிறிஸ்டிபாய், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்  மற்றும் கட்சி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'