கோவில்பட்டி கடலைக்கார தெருவில்  நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில்  வருஷாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் சங்கல்பம் பூஜை , விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கும்ப பூஜை, வேதபாராயணம், சக்தி ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூல மந்திர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, மகாபிஷேகம் நடந்தது.பின்னர் காளியம்மன் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு  புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர்.  ஏ.பி.கே.பழனிச்செல்வம் , கோவில் தர்மகர்த்தா எஸ்.எம்.மாரியப்பன்,  நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.