தூத்துக்குடியில் 1500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை கனிமொழி MP தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கங்கா பரமேஸ்வரி காலனி மார்ட்டின் நகர் 2வது வார்டில், 1500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.