தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் செயல்பட்டு வரும் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைபள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வேண்டாம் போதை என்ற தலைப்பில் மாணவ - மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுது. கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டு போதையினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து, மாணவர்கள் நல்வழியில் செல்வது குறித்தும் எடுத்தரைத்தனர். அப்போது பெற்றோர்கள் குழந்தைகள் மீது வைத்துள்ள அன்பு குறித்தும், மாணவர்கள் நல்வழியல் செல்வது குறித்து விளக்கி கூறப்பட்டது. அப்போது பெற்றோர்கள் கஷ்டங்கள் குறித்து எடுத்தரைத்த போது மாணவிகள் பலர் தங்களது பெற்றோர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு நெஞ்சை உருக்குவதாக இருந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சீனி, நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னணு, தொடர்பு பொறியியல்துறை தலைவர் தமிழ்ச்செல்வி, நூலகர் கருணைராகவன், உதவி பேராசிரியர் தம்பா, ரோகினி பிரிக்ஸ் துர்க்கராஜ், கே.ஆர்.சாரதா மேல்நிலைபள்ளி முன்னாள் மாணவர்கள் பிரவின்குமார், எழில், செல்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
போதை வேண்டாம் - பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி - கண்ணீர் விட்டு அழுத மாணவிகள்
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுகவிற்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
அடுத்த
திண்டுக்கல்லில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து வரும் மாநகராட்சி பணியாளர்கள்.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026