மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்தும், பற்றி எரியும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தவறிய மத்திய அரசு பதவி விலக வலியுறுத்தியும் கோவில்பட்டியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் பயணியர் விடுதி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் விஜயலட்சுமி அவர்கள் தலைமை வகித்தார்.இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட துணை தலைவர் தெய்வேந்திரன் அவர்கள் முன்னிலை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய தொழிற்சங்கம் மையம் மாவட்ட நிர்வாகி தோழர் மோகன் தாஸ் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ்குமார், மாற்றுத்திறனாளி சங்கம் முன்னாள் மாநில செயலாளர் முத்துக்காந்தாரி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். நிறைவாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சக்திவேல் முருகன் உரையாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய தொழிற்சங்க மைய மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, காப்பீட்டு கழக கோட்டச் செயலாளர்,தேவப்பிரகாஷ் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் காசி,பொருளாளர் வயண பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ,மாதர் சங்க நிர்வாகிகள் சித்ராதேவி, ஜானகி, விஜயா, வாலிபர் சங்க நிர்வாகி இசக்கி,இந்திய தொழிற்சங்க நிர்வாகிகள் அந்தோணி செல்வம், பாலசுப்பிரமணியன், சின்னத்தம்பி, வெங்கடகிருஷ்ணன், முத்துச்சாமி, வேலுச்சாமி,முருகன் உட்பட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மணிப்பூர் கலவரம்-ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
என் இமெயிலுக்கு மெசேஜ் பண்ணு.. மரக்கன்று உன்னைத் தேடி வரும்...மாணவர்களுக்கு அன்பு கட்டளையிட்ட எம்.எல்.ஏ!
அடுத்த
சாயல்குடி அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய மண்டல பூஜை விழா!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026