கோவில்பட்டியில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும்மகளிர் உரிமைத்துறை,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்,கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 125 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சௌபாக்கியா மஹாலில் நடந்தது.
கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் 125 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை மற்றும் சீதன பொருட்களான வளையல், புடவை, தேங்காய், குங்குமம், சந்தனம், கடலைமிட்டாய், பூ,தட்டு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.கீழஈரால் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.அனைவருக்கும் ஐந்து வகை சாத உணவுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.
ரோட்டரி மாவட்டதலைவர் விநாயகாரமேஷ், துணை ஆளுநர்முத்துச்செல்வம், சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜுன்னிசா பேகம் அனைவரையும் வரவேற்றார்.கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 125 கர்ப்பிணி பெண்களுக்கு சீதன பொருள்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
விழாவில்கோவில்பட்டி தாசில்தார் லெனின்,மாவட்ட தாய் சேய் நல அலுவலர் ஜெயசெல்வி,மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் வைகுந்த கிருஷ்ணன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் முத்துமாரி,ராணி விஜயா,பாலம்மாள், ரோட்டரி சங்க நிர்வாகிகள்கருப்பசாமி,சீனிவாசன்,நாராயணசாமி,பாபு,வீராசாமி,முத்துமுருகன், பூல்பாண்டி,நடராஜன், இளங்கோ, மாரியப்பன்,கிருஷ்ணசாமி,உள்படகோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ரோட்டரி சங்க செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.