கோவில்பட்டி அருகே கழுகுமலை  பேரூராட்சியில் சீராக குடிநீர் வழங்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பேரூராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், சீராக குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கழுகுமலை பேரூராட்சி பகுதியில் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி  பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கழுகுமலையில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ இதையடுத்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள போலீசார் அனுமதி கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து கழுகுமலை கழுகசலமூர்த்தி திருக்கோவில்  அருகே பாரதிய ஜனதா கட்சியினர்  ஒன்றிய தலைவர் ஜெகதீஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதையொட்டி கழுகுமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ராஜேந்திரன் , ராஜ்குமார்,  மாவட்ட பொது செயலாளர் வேல்ராஜா, மாவட்ட பொருளாளர் கணேஷ்,  தொழில் பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன் , பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமணகுமார் , ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, விவசாயிகள் பிரிவு மாவட்ட தலைவர் மருதையா , கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர் விஜயகுமார்,  முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் , பட்டியலின பிரிவு மாவட்ட தலைவர் அய்யாதுரை பாண்டியன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய தலைவர் முருகன் , கயத்தார் மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் முத்துராமலிங்கம், பொதுச்செயலாளர்கள் ராமர் பாண்டியன் சதீஷ்குமார் , ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் கருப்பசாமி ,பட்டியலின பிரிவு  ஒன்றிய தலைவர் முத்துசாமி,  தொழில் பிரிவு ஒன்றிய தலைவர் முத்துமாரியம்மன் ,, பிரச்சார பிரிவு ஒன்றிய துணை தலைவர் மாரியப்பன் , கூட்டுறவுபிரிவு ஒன்றிய தலைவர் விசுவநாகராஜன் , முன்னாள் ராணுவ வீரர் பிரிவு ஒன்றிய தலைவர் நல்லையசாமி  கிளைத்தலைவர்கள் மாடசாமி,பரமேஸ்வரன் ,கருப்பசாமி ,சுப்பையா , சுப்பிரமணியன் , சதீஷ்குமார் மாவட்ட நிர்வாகிவெற்றிவேல் ,பிரபாகரன் , இளைஞரணி ஒன்றிய தலைவர் சரவணன் , சிந்தனையாளர் பிரிவு ஒன்றிய தலைவர் கருப்பசாமி , மீனவர் பிரிவு ஒன்றிய தலைவர் ராமலிங்கம் , சிறுபான்மையினர் பிரிவு ஒன்றிய தலைவர் பிரான்சிஸ்,  தொழில் பிரிவு மாவட்ட துணை தலைவர் முத்துகிருஷ்ணன் , அரசு தொடர்பு ஒன்றிய தலைவர் அய்யாதுரை, பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் அய்யனார் பாண்டியன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சக்திவேல் ,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் கந்தவேல்,  மாவட்ட செயலாளர் லிங்கராஜ் ,விவசாய அணி ஒன்றிய தலைவர் கோவில்பட்டி மாரிசாமி,  ஐடி பிரிவு ஒன்றிய தலைவர் ஜெகன் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்