தூத்துக்குடி பரோலில் வெளியே வந்து நாலு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சண்முகையா என்பவரை ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் சண்முகையா இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காளியப்ப பிள்ளை என்பவரை கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் 1990 ஆம் ஆண்டு சண்முகையாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது இதைத்தொடர்ந்து சண்முகையா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கிலும் கடந்த 2000 ஆண்டில் சண்முகையாவிற்க்கு ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது இதை தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் சண்முகையா அடைக்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த 15- 1 -2019 ஆம் ஆண்டு தனது தாயார் உடல்நிலை சரியில்லை என பார்ப்பதற்காக ஆறு நாட்கள் பரோலில் வந்த சண்முகையா பின்னர் சிறைக்கு செல்லாமல் தலைமறைவாகி இருந்துள்ளார் இது தொடர்பாக பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகையாவை தேடி வந்தனர்.இந்நிலையில் கடந்த நாலு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சண்முகையாவை ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் கைது செய்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்
தூத்துக்குடி
4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மடிப்பு நுண்ணோக்கி செயல்முறை பயிற்சி!
அடுத்த
பள்ளி மாணவ மாணவிகளுக்கு தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி !
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026