தூத்துக்குடியில் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில் 40 ஆயிரம் ரூபாய் அவதாரம் -அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி செல்வகுமார்!  தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். கூலித் தொழிலாளியான இவர், பட்டா மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர் சந்திரயா (வயது 69) என்பவரிடம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை பரிந்துரை செய்து அனுப்புவதற்காக சந்திரயா ரூ.500 லஞ்சம் கேட்டாராம். இதைத் தொடர்ந்து நாகராஜ் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். தொடர்ந்து 15.3.2010 அன்று நாகராஜ், சந்திரயாவிடம் பணம் கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்திரயாவை கையும் கலவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வக்குமார் குற்றம் சாட்டப்பட்ட சந்திரயாவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து  தீர்ப்பு கூறினார்.