தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சண்முகர் சன்னதியில், வள்ளி தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ சண்முகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்களை பாடி மனமுருகி தரிசனம் செய்தனர்.
"ஆடிக்கிருத்திகையை" முன்னிட்டு இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள முருகன் சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ சண்முகர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் கூடிய சண்முகருக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், திருநீறு, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூ, பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி அரோகரா கோஷமிட்டபடி, முருகன் பாடல்களை பாடி மனமுருகி வழிபட்டனர்.
ஆன்மிகம்
"ஆடி கிருத்திகையை" முன்னிட்டு விளாத்திகுளத்தில், ஸ்ரீ சண்முகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இரும்பு கடைக்குள் புகுந்து பணத்தை திருடியவர் கைது - ரூபாய் 1 லட்சம் பணம் மீட்பு.
அடுத்த
இலங்கைக்கு கடத்த இருந்தசுமார் 1500 கிலோ எடையுள்ள பீடிஇலைகள் பறிமுதல் - 6 பேர் கைது.
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025