விளாத்திகுளம் அருகே பத்திரிக்கை அடித்து மொய்ப்பணம் எழுதி கோலாகலமாக நடைபெற்ற"முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம்!"
தமிழக முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவின் 7-ம் நாளை முன்னிட்டு முருகனுக்கும் - தெய்வானை தெய்வங்களுக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம்- நடுவிற்பட்டியில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமிகளின் திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனைமுன்னிட்டு இன்று அதிகாலையிலேயே கோவிலின் நடை திறக்கப்பட்டு, முறைப்படி பத்திரிக்கை அடித்து பொது மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கும் - தெய்வானை அம்பாளுக்கும் பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் விஷேச தீபாராதனையும் காட்டப்பட்டது.
பின்னர் மாலை 8 மணியளவில் பட்டத்து விநாயகர் கோவில் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த முருகப்பெருமான் மற்றும் தெய்வானையின் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்கள் முருகன் தெய்வானைக்கு மை பணம் எழுதி சென்றனர்,
இந்நிகழ்ச்சியில் எட்டயபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் திருக்கல்யாண வைபவத்தை கண்குளிர கண்டு ரசித்து தரிசனம் செய்தனர். மேலும், திருக்கல்யாணத்தில் பக்தர்கள் மொய் வைக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதையடுத்து இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஆன்மிகம்
"முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம்!"
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இலவச கண் பரிசோதனை முகாமை கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்!
அடுத்த
நாகலாபுரம் மற்றும் வெம்பூர் பகுதிகளில் மின்தடை.
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025