தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பனுக்கு மண்டல பூஜை முன்னிட்டு,பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள்  நடைபெற்றது நடைபெற்றது  வண்ணமலர்கள் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பனுக்கு, சிறப்பு தீபாதாரணை ஆராதனை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து செண்டை மேளம் முழங்க ஐயப்பனின் வீதி உலா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து  ஐயப்பன் சன்னிதானத்தில் வைக்கப்பட்டிருந்த 108 விளக்குகளுக்கு ஐயப்ப பக்தர்கள் விளக்கேற்றி, பஜனை பாடல் பாடி வழிபாடு நடத்தினர். இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.