விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சாத்தூர் வைப்பாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் கோலாகலமாக பக்தர்களின் கோவிந்தா...கோவிந்தா.. என்ற கோஷத்துடன் விமர்சையாக நடைபெற்றது. இதில் சாத்தூர் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவிலில் காலையில் வெங்கடாசலபதி குதிரை வாகனத்தில் எழுந்தருழி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வெங்கடாசலபதிக்கு அதிகாலை முதல் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வந்தன. இதில் சாத்தூர், விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். பின்னர் பெரியகொல்லபட்டி ஜமீன்தாரர் குடும்பத்தினர் வருகை தந்து பெரியகொல்லபட்டி கிராமமக்கள் சார்பில் ஸ்ரீ வெங்கடாசலபதி குதிரை பல்லக்கில் எழுந்தருளி சாத்தூரில் உள்ள நான்கு மாடவீதிகள் மற்றும் ரதவீதிகளின் வழியாக கள்ளழகர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாத்தூர் வைப்பாற்றில் பச்சைபட்டு உடுத்தி கோவிந்தா... கோபாலா என பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே அழகர் வைப்பாற்றில் இறங்கினார். இதில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்
வைப்பாற்றில் இறங்கிய கள்ளழகர்! : குதிரை வாகனத்தில் எழுந்தருழி பக்தர்களுக்கு அருள்பாலித்த வெங்கடாசலபதி...
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நள்ளிரவில் பயங்கரம்: வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
அடுத்த
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை!
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025