குமரக்கடவுலுக்கு சித்திரை கிருத்திகை விழா பால்,வேல்,அழகுவேல் காவடி கைலாய இசை வாத்தியங்களுடன் பால்குட ஊர்வலம்!
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பாதயாத்திரை குழு பக்தர்கள் சார்பில் அபிராமம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இருந்து அபிராமம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வளமாக மேலகொடுமலூர் அருள்மிகு ஸ்ரீ குமரக் கடவுள் சுவாமிக்கு சித்திரை கிருத்திகை விழா முன்னிட்டு வேல் அழகுவேல் காவடி எடுத்து வான வேடிக்கைகளுடன் கைலாய இசை வாத்தியங்களுடன் 108 பால்குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று மேல கொடுமலூர் கிராமத்தில் அமைந்துள்ள மூலவர் குமரக்கடவுள் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்து சென்றனர்.