கமுதியில் ஆதிவராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை!  ராமநாதபுரம் மாவட்டம்  கமுதியில்  மதுரை சாலையில் அமைந்துள்ள சக்தி பாபா ஆலயத்தில் ஆதிவராகி நரசிம்மர் ஆலயத்தில் கார்த்திகை மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஆதி வராகி அம்மனுக்கு  பால்,தயிர்,சந்தனம், இளநீர்,குங்குமம் மஞ்சள்,விபூதி பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் மற்றும் பஞ்சமுக தீபாதாரணை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பக்தர்களால் காணிக்கையாக ஆதிவராகி அம்மன் நரசிம்மர் சுவாமிகளுக்கு  வழங்கப்பட்ட வெள்ளிக் கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இந்நிகழ்வில்  கமுதி சுற்று வட்டார  பகுதிகளை சேர்ந்த  ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்,அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.